இயேசு நேசிக்கின்றார்

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; வெளிப்படுத்தின விசேஷம் 3:19
ஒரு வேளை நீ நினைக்கலாம் இயேசு என்னை நேசிக்கின்றாரா? அவர் என்னை நேசித்தால் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று, மறந்து போகாதே இயேசு உன்னை நேசிக்கின்றார்
வேதம் கூறுகிறது நீதிமொழிகள் - 3:12 ல்
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
வேதனைகளும், கண்ணீரும் துக்கங்களும், நிறைந்துகொண்டிருக்கும் உலகில் இன்று நாம் இருக்கின்றோம்.
சிலர் நினைக்கிறார்கள் ஐயோ நம்மை நேசிக்க யாரும் இல்லையே, பண வசதியும், செல்வச் செழிப்பும், உயர்ந்த அந்தஸ்தும் நமக்கு கிடைத்தால் துக்கம் நீங்கி சந்தோஷமாக வாழ முடியும் நம்மை விட்டு போன அனைவரும் நம்மை நேசிப்பார்களென்று,
ஆனால், இவைகள் அனைத்தும் உள்ளவர்களோ, “இவைகள் இருந்து என்ன பிரயோஜனம், மனதில் சந்தோஷம் இல்லையே, துக்கமே நிறைந்திருக்கிறது” என்கிறார்கள். அனேகர், நிம்மதியை தேடி இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உன் வாழ்விலும் துக்கம் நிறைந்து காணப்படுகிறதா? ஐயோ என்னை நேசிக்க யாரும் இல்லையே என்று ஏக்கத்தில் இருக்கின்றாயா. உன்னை நேசிக்கும் இயேசு உன்னை இரு கரம் நீட்டி அழைத்தவராய் உன் வாசற்படியில் உனக்காக காத்துகொண்டிருக்கிறார்

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிப்படுத்தின விசேஷம் 3:20

உன்னை நேசிக்கும் உன் இயேசுவிற்கு உன் அறை கதவை திறப்பாயா?
ஒரு வேளை நீ நினைக்கலாம் கர்த்தர் என்னை நேசிக்கவில்லை என்று இதோ ஏசாயா தீர்க்கதரிசி முலமாக கர்த்தர் கூறுகின்றார் ஏசாயா 49:14-16
14 சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.
15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

உன்னை நேசிக்கும் உன் இயேசு இதோ தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்றவராய் உன்னை நோக்கி அழைக்கிறார். என்னை நேசிக்க யாரும் இல்லையே எனக் கதுறும் நீ, உன்னை நேசிக்கும் இயேசுவை நோக்கி பார்ப்பாயா?
யோவான்- 16:20 ல் அருள்நாதர் கூறுகிறார் “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்”
துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் நம் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பராக. ஆமென்