Sunday, June 20, 2010

ஏன் அழுகிறாய்

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
யோவான் – 20:15
அன்று கல்லறையின் அருகில் நின்ற மரியாளை நோக்கி ஏன் அழுகிறாய் என்று கேட்ட இயேசு இன்று வேதனை நிமித்தம் அழுது புலம்பி கொண்டிருக்கிற உன்னையும் என்னையும் பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று. ஐயோ என் வேதனை நீக்க வருவேன் என வாக்கு கொடுத்த வாக்கு மாறாத நேசரை காணவில்லையே என அவரை தேடி தோட்டத்தில் நின்று கதறி கொண்டிருக்கும் அருமை சகோதரனே சகோதரியே இதோ தோட்டகாரனாகிய இயேசு உன் அருகில் நின்று உன்னை நோக்கி கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
அன்று வனாந்திரத்தில் இறச்சிக்காக அழுத ஜனங்களுக்கு சாப்பிடும் மட்டும் இறச்சி கொடுத்த தேவன் இன்று அழுது கொண்டிருக்கும் உன்னை பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
ஐயோ இருதய பாரத்தின் நிமித்தமாக நான் அழுது கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் சமாதானம் இல்லை, கணவன் அல்லது மகன் குடித்து வெறித்து வீட்டில் கலகம் ஏற்படுவதினால் இருதயபாரத்தோடு காணப்படலாம் அல்லது கடன் தொல்லை காரணமாக, வேலை இல்லாமையினால், குழந்தை இல்லாமையினால் ஒருவேளை இருதய பாரத்தோடு காணப்படலாம், எத்தகைய பாரத்தோடு நீ இருந்தாலும் இதோ தோட்டகாரனாகிய இயேசு உன்னுடைய பாரத்தை ஏற்றி செல்வதற்காக கல்வாரி வண்டியோடு உன் அருகில் வந்து உன்னோடு கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று இருதய பாரத்தை உள்ளில் வைத்துகொண்டு அவரை நோக்கும் சகோதரனே சகோதரியே அந்த பாரத்தை அந்த கல்வாரி வண்டியில் இறக்கி வைப்பாயா.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். (மத்தேயு – 11:28)

Wednesday, May 19, 2010

சீயோன்புரம் CSI




கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

Tuesday, May 18, 2010

இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்
இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3 ம் அதிகாரம் 14,15 வசனங்களை நாம் படிக்கும் போது
14 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
ஆம் இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
இனித் தீங்கைக் காணாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். இந்த இரு வசனத்தை பார்க்கும் போது தீர்க்கதரிசி நமக்கு முன்று காரியங்களை சுட்டி காட்டுகிறார.
முதலாவதாக 14 ம் வசனத்தில்
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. எனவும்,
இரண்டாவதாக 14 ம் வசனத்தின் தொடக்கத்தில்
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; எனவும்,
மூன்றாவதாக 14 ம் வசனத்தில்
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; எனவும் பார்க்கிறோம்
இந்த முன்று காரியங்களும் நமக்குள் உண்டு என்றால் நிச்சயமாக இந்த வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேறும்.
முதலாவதாக
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.

ஆம் சகோதரனே சாகோதரியே , நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரவேண்டுமாம் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரவேண்டுமானால் நம்முடைய இருதயம் எப்படி இருக்க வேண்டும்
சங்கீதம் 51-17 ல் தாவீது கூறுகிறார்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
நம்முடைய இருதயம் நொறுக்கப்படவேண்டும்
சங்கீதம் 147:3 ல் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், என பார்க்கிறோம்
அவர் நம் இருதயத்தை ஆராய்கிற கர்த்தர் எரேமியா 17:10 ல்
கர்த்தராகிய நானே……………, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
ஆம் அவர் இருதயத்தை ஆராய்கிற கர்த்தர்
2 இராஜாக்கள் 22 ம் அதிகாரத்தில் இருதயம் நொறுக்கப்பட்ட ஒரு ராஜாவை காணலாம் 19, 20 வசனங்களை நாம் படிக்கும் போது
19 நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்;
அவன் கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தை உடைததினால் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் வாக்கு கொடுப்பதை பார்க்கலாம்
இருதயம் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்
ரோமர் – 1:21 ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
நம் இருதய சிந்தனை எப்படி காணபடுகிறது நாம் நம்முடைய சிந்தனைகளினாலே வீணராக, தேவனை மகிமைப்படுத்தாமல் உணர்வில்லாதவர்களாக காணப்படுகின்றோமா! நம் இருதயம் இருளடைந்தது போகும் என்பதை மறந்து போகாதே
இருதயம் இருளடைந்தது போனால் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியாது
சங்கீதம் 32:11 ல் தாவீது கூறுகிறார்
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்துகளிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்
சங்கீதம்- 33:21 ல்
அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். என பார்க்கிறோம்
ஆம் அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பவேண்டும் கர்த்தர் தான் தேவனென்று விசுவசிக்க வேண்டும்.
சங்கீதம்- 13:5 ல்
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். என பார்க்கிறோம்
ஆம் அவர் மேல் விசுவாசம் இரூந்தால் மட்டுமே அவருடைய இரட்சிப்பினால் நாம் களிகூர முடியும்
நம்முடைய விசுவசம் எப்படி காணப்படுகிறது?
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் எபிரெயர் 11:6 ல்
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
தேவனுக்குப் பிரியமாக இருக்கவேண்டுமானால் நம்முடைய விசுவசம் எப்படி இருக்கவேண்டும்
யாக்கோபு – 2:14 ல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
இன்னும் 20 தாவது வசனத்தில்
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
என பார்க்கிறோம்
நம்முடைய விசுவசம் கிரியை உள்ளதாக இருக்கவேண்டும்
இன்னும் யாக்கோபு – 2:25,26 ம் வசனத்தை பார்க்கும்போது
25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
ஆம் நம்முடைய விசுவசம் கிரியை உள்ளதாக இருக்கவேண்டும்
ஒருவேளை நான் கிறிஸ்துவுக்காக இத்தனை வைராக்கியமாக இருந்தேனே, இத்தனை வைராக்கியமாக இருந்தும் எனக்கு இந்த சோதனை ஏன் என கேட்க்கலாம்
1 பேதுரு 1:7 ல் பேதுரு கூறுகிறார்
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
ஆம் விசுவாசத்தில் சோதனை உண்டு, ஆயினும் நம்முடைய திராணிக்கு மேலாக அவர் சோதிக்காமல் அதிலிருந்து தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
1 கொரிந்தியர் – 10:13 ல்
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
என பார்க்கிறோம்
ஆம் அவர் நம்முடைய விசுவாசத்தை சோதிக்கிற கர்த்தராக இருக்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் 1 கொரிந்தியர் – 13:2 ல்
மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
நாம் ஒன்றுமில்லை என்றால் எப்படி மகிழ்ந்து களிகூர முடியும், ஆகவே நாம் இருதயத்தில் அன்பு உள்ளவராயிருக்க வேண்டும்
1 கொரிந்தியர் – 13 ம் அதிகாரத்தில் பவுல் அன்பை பற்றி தெளிவாக கூறுகிறார். 3 ம் வசனம் முதல் 7 வரை படிக்கும் பொது
3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
எனவே இந்த அன்பு உள்ளத்தில் வந்து என்றால் நாம் முழு சமாதனத்தோடு மகிழ்ந்து களிகூர முடியும். எனினும் வெளியரங்கமாயிருக்கின்ற சில மாம்சத்தின் கிரியைகள் நம் இருதயத்தில் இரூந்தால் நாம் மகிழ்ந்து களிகூர முடியாது.
எனவே இருதயத்தில் அன்பு உள்ளவர்களாயிருந்து, கர்த்தரை முழுமனதோடு விசுவாசிக்கின்ற நாம், நம் இருதயத்தில் வெளியரங்கமாயிருக்கின்ற சில மாம்சத்தின் கிரியைகளை விட்டு விடவேண்டும். அப்போதுதான் நாம் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியும்.
இந்த கிரியைகள் நம் இருதயத்தில் இரூந்தால் நாம் முழுஇருதயத்தோடு மகிழ்ந்து களிகூர முடியாதபடி நம்முடைய இருதயத்தை நெருக்கி கொண்டு இருக்கும். நம்முடைய விசுவாசத்தை , நம்முடைய அன்பை அது அழித்து கொண்டு இருக்கும்,
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் இதை தெளிவாக கூறுகிறார்
கலாத்தியர் – 5 ம் அதிகாரம் 19 ம் வசனம் முதல் 21 ம் வசனம் வரை படிக்கும் பொது
19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;
நம்முடைய இருதயம் எப்படி காணப்படுகிறது?
கலாத்தியர் – 5 ம் அதிகாரம் 26 ம் வசனத்தில் பவுல் கூறுகிறார்
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

ஆம் இந்த கிரியைகளை நம்முடைய இருதயத்தில் இருந்து மாற்ற வேண்டும்
நீதிமொழிகள் 27:4 ல்
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
என பார்க்கிறோம்
ஆம் இத்தகைய கொடுமையுள்ள நிஷ்டூரமான செயல்கள் நம் இருதயத்தில் இரூந்தால் நிச்சயமாக நாம் சந்தோசமாக இருக்க முடியாது.
பிரசங்கி – 7:9 ல்
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
என பார்க்கிறோம்
ஆம் நம் தேவன் கொடுமையுள்ள, நிஷ்டூரமான, மூடரின் இருதயத்தில் வசிக்க மாட்டார் என்பதை மறந்து போகாதே.
1 கொரிந்தியர் – 13:2 ல் பவுல் கூறுகிறார்
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்;
எனவே நாம் இப்படிபட்ட துர்க்குண புத்தியிலே குழந்தைகளாயிராமல் இத்தகைய கிரியைகளை விட்டு விலக வேண்டும்.
ஆகவே நாம், நம் இருதயத்தில் வெளியரங்கமாயிருக்கின்ற சகல மாம்சத்தின் கிரியைகளை விட்டு விட்டு கலாத்தியர் – 5 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவியின் கனிகளை நாம் தரித்துகொள்ள வேண்டும்.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;
இந்த ஒன்பது நற்குணங்களும் நம் இருதயத்தில் காணப்படும் என்றால் நிச்சயமாக நாம் ஆர்ப்பரித்து முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியும்.
யோபு – 42:10 ல்
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
என பார்க்கிறோம்

ஆம் அன்பானவர்களே நம்முடைய இருதயம் எப்படி காணப்படுகிறது? இத்தகைய ஆவியின் கனிகள் நம் இருதயத்தில் காணப்படுகின்றதா? அல்லது வெளியரங்கமாயிருக்கின்ற மாம்சத்தின் கிரியைகளுக்கு அடிமைப்பட்டு காணப்படுகின்றோமா?
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; என கலாத்தியர் – 6 4 ல் பவுல் கூறுகிறார்
நாம், நம்முடைய கிரியையை சோதித்துப்பார்ப்போமா !!!!
இரண்டாவதாக
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்;
ஆம் சகோதரனே சாகோதரியே, நம் ஆக்கினைகளை கர்த்தர் அகற்ற வேண்டும். கர்த்தர் நம் ஆக்கினைகளை அகற்ற வேண்டும் என்றால் முதலாவது நம்முடைய சாபம் மாற்றப்படவேண்டும்.
சாபம் மாற்றப்படவேண்டும் என்றால் முதலாவது நம்மிடம் உள்ள சாபத்தீடானது மாற்றப்படவேண்டும். அதாவது கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நமிடம் உண்டு என்றால் அதை மாற்றவேண்டும்.
யோசுவாவின் புஸ்தகம் 6,7 ம் அதிகாரத்தை படிக்கும் போது
6 ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் கர்த்தருக்கு மகிமை செலுத்தியதால் கர்த்தர் அவர்கள் சத்துருவை அவர்கள் கையில் ஒப்பு கொடுத்தார் என பர்கேறோம். ஜனங்கள் யுத்தம் செய்யவில்லை மாறக ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள் அலங்கம் இடிந்து விழுந்தது
20,21 ம் வசனத்தை படிக்கும்பொது
20 எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
21 பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
என பார்க்கிறோம்
இங்கு கர்த்தர் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்
6 ம் அதிகாரம் 17, 18, 19 தாம் வசனங்களில்
17 ஆனாலும் இந்தப்பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
18 சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
19 சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
7 ம் அதிகாரம் 1 ம் வசனத்தை படிக்கும்பொது
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்;
என பார்க்கிறோம்
ஆம் கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நமிடம் உண்டா?
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினதால் எரிகோவின் கோட்டையை கைபற்றிய இஸ்ரவேலர் சிறிய பட்டணமாகிய ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்
4 ம் வசனத்தை படிக்கும்பொது
ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
என பார்க்கிறோம்
ஆம் கர்த்தர் உன் சத்துருக்களை உன் நடுவிலிருந்து விலக்க வேண்டுமானால் கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நம்மிடம் உண்டு என்றால் அதை விட்டு விலக வேண்டும்.
யோசுவா – 7 ம் அதிகாரம் 13 ம் வசனத்தில் இதை காணலாம்
நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் சாபத்தீடானது நம் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும் நம் ஆக்கினை நம்மை விட்டு போகாது என்பதை மறந்து போகாதே.
யோபு – 31 ம் அதிகாரம் 3 ம் வசனத்தை படிக்கும்பொது
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
ஆம் நம்முடைய செய்கை எப்படி காணபடுகிறது அக்கிரமச்செய்கைக்காரராக காணபடுகிறோமா?
நீதிமொழிகள் 17:21 ல்
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
என பார்க்கிறோம்
இன்னும் நீதிமொழிகள் 12:8 ல்
மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
ஆம் நம்முடைய இருதயம், நம்முடைய நாவு எப்படி காணப்படுகிறது மாறுபாடான, புரட்டு நாவுள்ளவனாக காணபடுகிறோமா?
இன்னும் நீதிமொழிகள் 6 ம் அதிகாரத்தில் கர்த்தர் வெறுக்கும் ஆறு காரியங்களை நாம் பார்க்கலாம்
நீதிமொழிகள் 6 :16-19
16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
ஆம் நம்முடைய நிலமை எப்படி காணப்படுகிறது கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் நம்மில் காணப்படுகின்றதா?
இன்னும் நீதிமொழிகள் 19:5 ல்
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
என பார்க்கிறோம்
நாம், நம்முடைய நிலமையை சோதித்துப்பார்ப்போமா !!!!
கலாத்தியர் – 3:13 ல்
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.
என பார்க்கிறோம்
ஆம் நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டு; நம்முடைய சாபத்திற்காக அவர் சாபமானார்.
இந்த இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொன்டல் சகல சாபத்தையும் நம்மை விட்டு மாற்ற அவர் வல்லவராக இருக்கிறார்.
முதலாவதாக இந்த இயேசுவை நம் சொந்த இரட்ச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும்,
யார் இந்த இயேசு
ஆதி மனிதர்களை சபத்திற்கு உட்படுத்திய துஷ்ட சத்துருவாம் பிசாசானவனின் தலையை நசுக்கி மனித குலத்தை சபத்திலின்று விடுவிக்க வந்த கிறிஸ்து
ஆதியாகமம் 3:15 ல்
கர்த்தர் துஷ்ட சத்துருவாம் சர்ப்பத்தைப்பார்த்து இவ்விதமாய் கூறுகிறார்
“அவர் உன் தலையை நசுக்குவார்”
யார் அவர்
அவர்தான் இந்த இயேசு
யோவான் 1:29 ல் யோவான் கூறுகிறார்
இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
மீகா 5:5 ல் மீகா தீர்க்கதரிசி கூறுகிறார்
இவரே சமாதான காரணர்;
ஏசாயா 53:5 ல் ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார்
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஆம் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட இவரே உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, இவரே சமாதான காரணர்; இந்த இயேசுவை நம் சொந்த இரட்ச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும்,
இந்த இயேசுவை ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்
முதலாவதாக நம்முடைய இருதய கதவை திறக்கவேண்டும்
வெளிப்படுத்தின விசேஷம் 3:20 ம் வசனத்தை படிக்கும்பொது
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
ஆம் வாசற்படியிலே நின்று தட்டுகின்ற இந்த இயேசுவை நம் இருதயமாகிய அந்த வீட்டிற்குள் பிரவேசிக்க நம்முடைய இருதய கதவை திறப்போமா?
அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயர்- 10:22 ல் கூறுகிறார்
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
ஆம் வாசற்படியிலே நின்று தட்டுகின்ற இந்த இயேசுவை உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் அவரை ஏற்று கொண்டால் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்க அவர் வல்லவராக இருக்கிறார்
இதோ சங்கீதக்காரன் கூறுகிறான்
சங்கீதம்- 139:23,24 ல்
23 தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதக்காரனைபோல நாமும் கேட்போமா, அப்பா! என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
1 யோவான் 3:20 ல் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
ஆம் நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதபடி நம்முடைய இருதயத்தை நாம் சோதித்து பார்போமா
மூன்றாவதாக
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்;
1 யோவான் 4:4 ல் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
ஆம் இந்த உலகத்தை ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரியவர் நம்மோடு கூட வேண்டும்.
2 நாளாகமம் ம் அதிகாரத்தை படிக்கும் போது
தேவனுடைய ஆவியானவர் ஓதேதின் குமாரனாகிய அசரியாவின் மூலமாக கூறுகிறார்
2 நாளாகமம் 20: அதிகாரம் 2 ம் வசனத்தை படிக்கும்பொது
சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
ஆம் நாம் அவரை தேடினால் அவர் நிச்சயமாக நம்மோடு இருப்பார்.
இந்த பெரியவராம் பாலகன் இயேசுவை தேடுவோமா?
மீகா 5:5 ல் மீகா தீர்க்கதரிசி கூறுகிறார்
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
ஆம் துஷ்ட சத்துருவாம் சர்ப்பத்தின் தலையை நசுக்கி மனித குலத்தை சபத்திலின்று விடுவிக்க வந்த பெரியவராம் பாலகன் இயேசு நம் நடுவில் இருக்க வேண்டும்
யோவேல் 2:13 ல் யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார்
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
ஆம் நம்முடைய தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற கர்த்தர் அவர்
ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் நம்மோடு இருக்கும் தேவன்
ஏசாயா – 7:14 ,மற்றும் மத்தேயு – 1:23 இதை காணலாம்
மத்தேயு – 1:23 ல்
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்
யோவேல் 2:21 ல் தீர்க்கதரிசி கூறுகிறார்
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு;
ஆம் சகோதரனே சாகோதரியே , பயப்படாதே நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு இதோ ஒரு சந்தோஷமான செய்தி, நம்முடைய சாபத்தை நீக்கி, நம் ஆக்கினைகளை அகற்றி, நம்மோடு கூட நம் இருக்கும் பெரியவராம் பாலகன் நம்மோடு கூட உண்டு.
யாக்கோபு – 4:8 ல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
ஆம் பண்டிகைகளை கொண்டாடிய நாம் அவரோடு சேர்ந்து காணப்படுகின்றோமா அல்லது நம்முடைய கைகளை அநீதிக்கும், நம்முடைய இருதயங்களைப் பாவத்துக்கும், ஒப்புகொடுத்து இருமனமுள்ளவர்களாக கானப்படுகின்றோமா?
இதோ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோவான் சுவிஷேசத்தில் இவ்விதமாக சொல்லுகிறார்
யோவான் 14:23 ல்
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
ஆம் நாம் அவரோடு அன்பாய் இருந்தால் அவர் நம்மிடத்தில் வந்து நம்மோடு கூட இருப்பார். ஒருவேளை நாம் கேட்கலாம் நாம் எப்படி அன்பாய் இருக்க வேண்டு என்று
யோவான் 14:15 ல் அவரே சொல்லுகிறார்
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
ஆம் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் அவர் வந்து நம்மோடு கூட வாசம்பண்ணுவார் மாத்திரம் அல்ல நம்மோடு கூட நமக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனையும் தருவார். யோவான் 14:16 ல் இதை காணலாம்
யோவான்-14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
ஆம் அன்பானவர்களே யோவான் - 15 அதிகாரம் 4 முதல் படிக்கும்பொது மீண்டும் இதை தெளிவாக கூறுகிறார் அவரில் நிலைத்திருந்தால் அவர் நம்மில் நிலைத்திருப்பார்.
4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ஆம் அவர் நம்நடுவில் நிலைத்திருக்க வேண்டுமானால் நாம் அவரில் நிலைத்திருக்கவேண்டும்.
நாம் அவரில் நிலைத்திருக்கின்றோமா?
உபாகமம் 10 அதிகாரம் 12,13 ம் வசன ங்களை படிக்கும்பொது
12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
ஆம் சகோதரனே சாகோதரியே அவர் உன் நடுவில் நிலைத்திருந்து உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கி, இனி நீ தீங்கைக் காணாதபடி உனக்கு நன்மையுண்டாகவே உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
உபாகமம் 10 -16 ல் படிக்கும்பொது
16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
ஆம் உபாகமம் 10 -16 ல் சொல்லியிருப்பது போல இனி நாம் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருதயத்தை அவருக்கு திறப்போமா
ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கர்தர் உரைக்கிறார்
ஏசாயா - 45:7 ல்
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
ஆம் சகோதரனே சாகோதரியே சகலத்தைம் படைத்து சகலத்தைம் செய்கிற கர்த்தரிடத்தில் நம் இருதயத்தை பரிபூரணமாக ஒப்படைப்போம். நம் நடுவில் இரூந்து, நம் ஆக்கினைகளை அகற்றிய கர்த்தரிடத்தில் முழு மனதோடும், முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூருவோம்.
தீர்க்கதரிசி மூலமாக கர்தர் உரைக்கிறார்
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
ஆம் சகோதரனே சாகோதரியே இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து அவரில் களிகூர்ந்த. நீ இனித் தீங்கைக் காண்பதில்லை
கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

தேவ அன்பு

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் – 2:5
பாருங்கள் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் அவருடைய (கிறிஸ்துவினுடைய) வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும் என்று. கிறிஸ்துவின் அன்பு எப்படிபட்டது என்று அவரே கூறுகிறார் 3 ம் அதிகாரம் 16 முதல் 18 வரை படிக்கும் போது
16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இந்த நாட்களில் நம்முடைய அன்பு எப்படி காணப்படுகிறது தேவ அன்பு நம்மிடம் காணப்படுகிறதா, நாம் நம்மை தாமே சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்………….. ஒருவேளை நாம் நம்முடைய சகோதரனுக்காக ஜீவனை கொடுக்காவிட்டாலும் நம் சகோதரனின் கஸ்டத்திலாவது உதவி செய்கிறவர்களாக கானப்படுகிறோமா.
ரோமர் 13;8 ல் பார்க்கும்போது
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் என பார்க்கிறோம்
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. என ரோமர் 13:10 ல் பார்கிறோம்.
பிறருக்கு கெடுதல் செய்யாத இந்த அன்பு நம்மில் காணப்படுகிறதா?
ஆதியிலே தேவன் வழங்கிய பத்து கட்டளைகளில் பிராதன கட்டளை எது என பார்ப்போமானால்
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
இதை மத்தேயு – 22:39 மற்றும் மாற்கு – 12:31 ம் வசனங்களில் காணலாம்.
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா கூறுகிறார் கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெற தேவனுடைய அன்பிலே நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று.
யூதா 1:21 ஐ படிக்கும் போது
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
தேவனுடைய அன்பிலே நித்திய ஜீவனுக்கேதுவாக காத்திருப்போமா
நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

Monday, May 10, 2010

யார் நீ?

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபம் 1 ம் அதிகாரம் 15 ம் வசனத்தை பார்க்கும்போது
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்
என படிக்கிறோம், கிறிஸ்துவுக்காக எல்லாம் குப்பை என்று எண்ணி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான்னையே அர்பணித்த பவுல் கூறுகிறார் தான்னை பாவிகளிலும் பிரதான பாவி என்று
லூக்கா 5 தாம் அதிகாரம் 8 டாம் வசனத்தில் பேதுரு கூறுகிறார் நான் பாவியான மனுஷன் என்று
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
லூக்கா – 18 டாம் அதிகாரத்தில் இயேசு இரண்டு பேரை பற்றி கூறுகிறார் 10 தாம் வசனம் முதல் 14 ம் வசனம் வரை படிக்கும்போது
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இன்றைக்கு நாம் எந்த நிலமையில் காணப்படுகின்றோம். அந்த பரிசேயனை போல நான் பரிசுத்தவான் என்று நம்மை நாமே பெருமை பாராட்டி கொண்டு இருக்கின்றோமா. அல்லது பவுலை போல, பேதுருவை போல , இந்த ஆயக்கரனை போல நம்மை பாவி என்று அற்பணிக்கிண்றோமா? அருள்நாதர் கூறுகின்றார் பெருமை பாரடினவன் அல்ல பாவியே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று
ரோமர் 3:23 ல் பவுல் கூறுகிறார்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி.
ஆம் நீதிமான் யாரும் இல்லை எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களாகி விட்டோம்
சங்கீதம் 51:5 ல் பார்க்கும்போது
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்றும்
நீதிமொழிகள் - 20:9 ல்
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
என்றும் படிக்கிறோம்
இன்றைக்கு நாம் யார்? எந்த நிலமையில் காணப்படுகின்றோம் ஆயக்கரனை போல நான் பாவி என்று அவர் சமுகத்தில் ஒப்புகொள்ளுவோமா?
லூக்கா 5:32 ல்
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்த இயேசுவின் கையில் அப்பா நான் பாவிகளிலும் பிரதான பாவி என்று நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.
ஆமென்

Tuesday, April 27, 2010

மனவிருப்பம்

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
சங்கீதம் – 20:4
என்ன அருமையான வாக்குத்தத்தம், கர்த்தர் நம்முடைய மன விருப்பத்தின் படி நமக்கு தந்தருள வல்லவராக இருக்கிறார். நம்முடைய மனவிருப்பம் என்ன? நமது ஆலோசனைகளையெல்லாம் எப்படி காணப்படுகிறது?
நம்முடைய மன விருப்பம் கர்த்தருக்கு ஏற்றதாக காணப்படுகிறதா?
உபாகமம் 30:15 ல் மோசே இரண்டு காரியத்தை இஸ்ரவேல் ஜனத்துக்கு முன்பாக வைப்பதை பார்க்கலாம்
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
இன்றைக்கும் இந்த இரண்டு காரியங்களும் தேவன் நம் முன்பாக வைத்து இருக்கிறார், நம்முடைய மன விருப்பம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நம்முடைய மனவிருப்பம் ஜீவனை நோக்கியா அல்லது மரணத்தை நோக்கியா, நம்மை நாமே சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.
நீதிமொழிகள் 16 ம் அதிகாரம் 25 ம் வசனத்தை படிக்கும் போது இவ்விதமாக கூறப்பட்டுள்ளது
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
மத்தேயு 26:50 ல் அருள்நாதர் யூதாசை பார்த்து இப்படி கூறுகிறார்
இயேசு அவனை (யூதாசை) நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்.
இன்று நம்மை பார்த்து கேட்கிறார் சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய், உன்னுடைய மன விருப்பம் என்ன என்று. நாம் என்ன பதில் சொல்லுகிறோம் யூதாசை போல நானும் உம்மை சிலுவையிலறைய, காட்டிகொடுக்க வந்தேன் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா, அல்லது அப்பா என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன் ஜீவ வழியை எனக்கு காண்பியும் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா. உன்னுடைய மனவிருப்பம் எதுவானாலும் நியாயத்தீர்ப்பு என்பது ஒன்று உண்டு என்பதை மறந்து போகாதே. இதோ எசேக்கியேல் தீர்கத்தரிசி மூலமாக கர்த்தர் எச்சரிக்கிறார் நம் ஒவ்வொருவரையும் அவனவன் வழிகளின்படியே, அவனவன் மனவிருப்பத்தின் படியே நியாயந்தீர்ப்பேனென்று.
எசேக்கியேல் 33:20 ல் ம் வசனத்தை படிக்கும் போது
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். நீதிமொழிகள் :15:9
கர்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

Monday, April 19, 2010

யார் அந்த சத்துரு?

மத்தேயு 5:44 லை படிக்கும் போது
44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
ஆம் அன்பானவர்களே நம் ஆண்டவர் சொல்லுகிறார் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
லூக்கா 6:17,25 தாம் வசனங்களிலும் இதை காணலாம்.
ஒரு வேளை நாம் கேட்கலாம் எனக்கு சத்துரு யார்? இன்னும் ஒரு வேளை நாம் நினைக்கலாம் எனக்கு சத்துரு பிசாசானவன் என்று, என் ஆண்டவர் கூறுகிறார் சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று. ஆண்டவர் ஒருபோதும் பிசாசை சிநேகியுங்கள் என்று சொல்வதில்லை அப்படியானால் நமக்கு சத்துரு யார்?
மத்தேயு 10:36 ல் அருள்நாதர் கூறுகிறார்
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
காரணம் என்ன? நம்மிடம், நம் இருதயத்தில் மன்னிக்கும் மனப்பான்மை இல்லை. நம்மிடம் கோபத்தின் ஆவி உள்ளதால் நம் சகோதரர்கள் செய்யும் சிறிய தவறை கூட பொறுக்கமுடியாமல் நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
யாக்கோபு 1:20 ல் பார்க்கும்போது
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ஆம் நம்முடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது. மாறாக நம்முடைய கோபத்தின் நிமித்தமாக பகை நெஞ்சில் குடிகொள்கிறது, மன்னிக்கும் மனப்பான்மை அற்றவர்களாய், நம் சகோதரர் மீதுள்ள பொறாமையினால், பொறுமை இழந்து நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
நீதிமொழிகள் – 27:4 ல் பார்க்கும்போது
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
ஆம் கோபத்தின் உக்கிரத்தால், மன்னிக்கும் மனப்பான்மை அற்ற நாமே நமக்கு சத்துரு என்பதை மறந்து போகாதே
லூக்கா - 17:3 ல் அருள்நாதர் கூறுகிறார்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
தன்னை கொலை செய்த தன் ஜனத்தை மன்னிக்க, பிதாவினிடத்தில் வேண்டிய அருள்நாதர் இயேசுவின் பின் செல்கின்ற நாம் நம் சகோதரர் செயும் சிறிய தவறை மன்னிப்போமா
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

Wednesday, April 14, 2010

ஜெயம்

4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவான் - 5:4, 5
உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்றல் இயேசுவை தேவனுடைய குமரன் என்று விசுவாசிக்க வேண்டும் என பார்க்கிறோம் ஆம் கிறிஸ்துவால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். இதற்க்கு தேவை விசுவாசம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; என எபிரெயர் 11: 6 பார்க்கிறோம். நம்முடைய விசுவாசம் எப்படி காணப்படுகிறது? நமக்காக கல்வாரியல் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய இந்த இயேசுவை நாம் விசுவசிகின்றோமா? ஆபிரகாம் வாழ்கையை பார்க்கும்போது அவன் விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டான் என பார்க்கிறோம். அவனுடைய விசுவாசம் அவனுக்கு விசுவாசிகளின் தகப்பன் என்னும் பட்டத்தை கொடுத்தது. நம்முடைய விசுவாசம் எப்படி காணப்படுகிறது?
மத்தேயு 17: 20 ல் அருள்நாதர் கூறுகிறார் கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். –
புத்தகத்தில் படித்த ஒரு செய்தி: ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.
ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன், ‘கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.
ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம், ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்று கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்து குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று சொன்னார்கள்.
என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய வைத்தது.
சிறு பிள்ளைகளின் விசுவாசம் அந்த இடத்திற்கு ஒரு ஜெயத்தை, ஒரு வெளிச்சத்தை கொண்டுவந்தது. ஆம் மத்தேயு 21: 22 ல் அருள்நாதர் கூறுகிறார் "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்"
இன்று உங்கள் வாழ்விலும் துக்கம் நிறைந்து காணப்படுகிறதா? துக்கம் பல காரணங்களினால் ஏற்பட்டு, உங்கள் வாழ்வின் சந்தோஷத்தை அழித்துப் போட்டு விட்டதா? வியாதி, கடன், குழந்தை பாக்கியம் இல்லாமை, கணவனின் குடிப்பழக்கம், பிள்ளைகளின் கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்பப் பிரிவு, திருமணத்தடை, நம்பினவர்களால் கைவிடப்பட்ட நிலை, தோல்வி, வறுமை தொழில் வியாபாரத்தில் வீழ்ச்சி, வழக்குகள் இதுபோன்ற பல காரணங்கள் உங்கள் சந்தோஷமான வாழ்க்கையைப் பாதித்து உள்ளதா?
இவ்வாறான சூழ்நிலையில் சந்தோஷத்தைத் தேடியும் கிடைக்காத நிலையில் இனி விடுதலை பெற வழி தெரியவில்லையே, எல்லாமே தோல்வி என்று சொல்லி தோல்வியடைந்த சூழ்நிலையில் வாழ்கிறீர்களா? கலங்க வேண்டாம். யோவான்- 16:20 ல் அருள்நாதர் கூறுகிறார் “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” நிச்சயமாக இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தைத் தரமுடியும்.
மலையை கடலுக்குள் தள்ள மாத்திரம் அல்ல, நம்மை நெருக்கி கொண்டு இருக்கின்ற துஷ்ட சத்துருவின் சகல அந்தகாரத்திலின்று நமக்கு ஜெயத்தை தர, நாம் ஜெயத்தை பெற்று இந்த உலகத்தை ஜெயிக்க, நமக்காக கல்வாரியல் தொங்குகிற இந்த இயேசுவை நோக்கிப்பார்போமா?
என்னை (இயேசுவை) நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3
கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமன்

Friday, April 2, 2010

ஏழு பூக்கள் - சிலுவை தியான செய்தி

கல்வாரி மரத்தில் பூத்த ஏழு பூக்கள்
22 அவன்(பிலாத்து) மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் (இயேசு) என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23 அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். லூக்கா 23 : 22-25
சொந்த ஜனத்தின் கூக்குரலால் ஒரு பாவமும் அறியாத பரிசுத்தரை அந்த பிலத்து சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுத்தான். காலகட்டத்தையே இரண்டாக பிரித்து மனுக்குலதுக்கும் இறைவனுக்கும் இடையே இருந்த திரை சீலையை இரண்டாக கிழித்த நம் இயேசு கொல்கத்தா மலையில் முன்று ஆணிகளில் தொங்கினவராய் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காய் சிந்தி கல்வாரி சிலுவையல் ஏழு பூக்களை உதிர்த்தார்

1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
பொதுவாக இன்றைய நாட்களில் நாம் பல வாக்குறிதிகளை விடுகின்றோம் பலவற்றை பேசுகிறோம் ஆனால் நாம் பேசுவதற்கும் நமது வாக்குறிதிகளுக்கும் நமது வாழ்க்கையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அருள்நாதர் தன்னுடன் இருந்த மக்களுக்கு கூறினார் அதேபோல் அவர் மன்னித்தது மட்டுமல்ல பிதாவிடம் மன்னிப்பதற்காக பரிந்து பேசுவதையும் பார்க்கிறோம்
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
சிறுவயதில் நாம் தவறுகள் செய்யும் போது தாத்தா பாட்டி , அப்பா அம்மாவிடம் சொல்லுவார்கள் அவன் தெரியாம செய்துவிட்டான். விட்டுவிடு என்று. அதுபோலதான் நம் தேவன் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார். காரணம் என்ன? அவர்கள் அறியாமல் செய்தது. அதனால் தான் கூறுகிறார் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. இன்று நாம் அறிந்து இயேசுவை தினம்தோறும் சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக காணப்படுகின்றோம். வேதம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 ல் பார்க்கிறோம். "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 ல் பார்க்கிறோம். இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க தயை பொரிந்தினவராகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2 பேதுரு 3:9 சொல்கிறது. நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர் 6:23 ல் பார்க்கிறோம். நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக மனிதனானார். நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 ல் பார்க்கிறோம். நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். நமக்கு மாத்திரமல்ல முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 ல் பார்க்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? மீளமுடியாதபடித்தோன்றும் குற்ற மனப்பான்மையால் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இதோ நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டு கல்வாரியில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

"அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" எபேசியர் 1:7


2) இரட்சிப்பு
"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)
இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது! அவன் கஷ்டபட்டு அதை பெறவேண்டிய அவசியமே இல்லை! எப்படியெனில் இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்னவென்றால்:
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் -3:14,15
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் ஆண்டவரின் வழினடத்துதல்படி கானானை நோக்கி போய்கொண்டிருந்தபோது, அவர்கள் செய்த தவறுகளின் காரணமாக கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிபட்டு மாண்டுபோயினர். அவர்கள் தேவனிடத்தில் முறையிட்டபோது, தேவன் ஒரு வெண்கல கொள்ளி வாய் சர்ப்பத்து உருவத்தை செய்து, அதை ஒரு கம்பத்தில் தூக்கி வைக்கும்படிக்கும், சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் உடனே அதை நோக்கி பார்த்தால் போதும் பிழைப்பார்கள் என்றும் கட்டளயிட்டார். கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு பார்த்த ஒரே காரணத்துக்காக எவ்வாறு தப்பிததார்களோ, அதுபோலவே சாத்தான் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள் சிலுவையில் தூக்கப்பட்ட இயேசுவை நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து தப்பித்து விடலாம் அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை! இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
யோவான் -3:18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; என்றும் யோவான்-1:12. ல் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன் பிசாசின்பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்) வந்துவிடுவாதால் "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!. இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, யாரையும் வேண்டாம் என்று ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்! இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்! கிரயம் எதுவும் இல்லை! அதை இயேசு செலுத்திவிடார். அது தேவனின் இலவச ஈவு! ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; பாருங்கள் இந்த இலவச இரட்சிப்பை கள்ளன் எப்படி பெற்று கொண்டான் முதலாவது பாவத்தை உணர்கிறான் லூக்கா 23 : 41(a) நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம் என கூறுவதை பார்க்கலாம்.இரண்டாவது இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(a) இயேசுவை நோக்கி: ஆண்டவரே முன்றாவது தேவனின் இரண்டாம் வருகையை அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(b) நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் ஆம் நாமும் இந்த கள்ளனை போல நம்முடைய பாவத்தை உணர்த்து அதை அறிக்கையிட்டால் இந்த பெரிதான இரட்சிப்பை இலவசமாக பெற்றுகொள்ள முடியும்
தேவனுடைய இரட்சிப்பு என்பது நாளைக்கோ, ஒரு வாரம் விட்டோ, ஒரு மாதம் விட்டோ, ஒரு வருடம் விட்டோ கிடைப்பதுக்கிடையாது.
பாவத்தில் இருந்தும்,பாவத்தின் தண்டனையிலிருந்தும், விடுதலை கொடுக்க, நமக்கு ஒரு புது வாழ்வை கொடுக்க, பாவத்தினாலும், பாவத்தின் வல்லமையினாலும் மரித்துக்கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை தர இயேசு இன்று அழைக்கிறார். சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த கள்ளனுக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் அவரை நோக்கி கூப்பிடுகிற அனைவருக்கும், அவரோடு கூட இருக்கும்படியான பாக்கியம், ஸ்லாக்கியம் கிடைக்கிறது.

லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஒரு வேளை இதை வாசிக்கிற யாராவது, இந்த உன்னதமான நேசரின் அன்பை இழந்திருப்பீர்களானால், இழந்துப்போன சந்தோஷத்தை, சமாதானத்தை, உங்களுக்கும் எனக்கும் மறுபடியும் கொடுக்க இந்த இயேசு வல்லவர். அவரை மறுதலித்து அவரை விட்டு பின் வாங்கி போய்யிருப்போமானால், இன்று இந்த குரல் நம்மை நோக்கி வருகிறது. "இன்று" இன்றைக்கே உன்னுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், படிப்பில், தொழிலில், உன்னுடைய பெலவீனத்தில், நோய்களில், உனக்கு ஒரு முழு நிச்சயத்தை, நம்பிக்கையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்.. நாமும் நமது பாவத்தை உணர்ந்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

3) அரவணைப்பு
தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)
இறுகிய; மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு மகனை தம் சொந்த இனத்தவரே, மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம் சுமத்தி, சிலுவையில் அறையும் பொழுது அருகிலிருக்கும் தாய்க்கு ஓர் இறுகிய உடைந்து போன சூழலே இருக்கும். தன்னை, தன் இனத்தவரே "இவன் எங்கள் இனத்தைச் சார்ந்தவன் இல்லை" என்பதாக ஊருக்குப் புறம்பே அவமானமாகச் சாகடித்துக் கொண்டிருக்கும் காட்சியை, தன் தாயும் நேரில் காண நேரும் சூழல், ஒரு மகனுக்கு மன இறுக்கத்தையும், கையறு நிலையையும் தான் கொண்டு வந்திருக்கும். இருவரும் இதயம் வெடித்து இறக்குமளவுக்கு ஏதுவான சூழலே அது என்றாலும் மிகையில்லை. தேவனுக்குள், பரமதந்தையின் ஐக்கியத்துக்குள் இருப்பவரே, இந்த மனித இயல்பையும், இறுக்கத்தையும், கையறு நிலையையும் மீறி, இறைவன் சித்தப்படி எது நடப்பினும் அதற்கு ஆம் என்றும் ஆமென் என்றும் வாழ முடியும். இயேசு அப்படித்தான் வாழ்ந்தார்.
இன்று முதியோர் இல்லங்களில் இருக்கும் பெற்றோர் பெருகி விட்டனர்.தன் ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தையை ஊட்டி சீராட்டி வளர்த்த தாய் முதிர் வயதானதும்,பிள்ளைகளுக்கு பாரமாகி விடுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.தாய் தன் கடமைகளை செய்யாதிருந்தால் மகன்,மகள், இப்படியான ஆசீர்வாதத்தோடு வளர்ந்திருப்பார்களா என நினைக்க தோன்றுகிறதல்லவா? அனால், இத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குறை கூறாமல் அவர்களுக்காக பரிந்து பேசுவார்கள். இதுவே தாயின் அன்பு.
இயேசு கிறிஸ்து மரண தருவாயில் வேதனையின் மத்தியில் சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கும் போதும் தான் மூத்த மகனாய் இருந்ததை உணர்ந்து தன் பிரிய சீசனாகிய யோவானை பார்த்து, "இதோ உன் தாய்" என்று சொல்லி, தாய்க்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினார். தன்னை நேசித்த யோவானை, தன் தாயையும் நேசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே..(நீதி 23:22)
ஒரு தாயின் வல்லமையான ஊக்கமான ஜெபம் எப்படியாய் ஒவ்வொரு குடும்பங்களையும் கட்டுவதை நாம் காண்கிறோம். அந்த தாய் வயது சென்றவளாகும் போது அவர்களை கவனிப்பது நம் கடமையல்லவா? "உன் நாட்கள் நீடித்திருப்பதட்கு உன் தகப்பனையும்,உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (யாத் 20:12)
அப்பா என் பெற்றோரை நான் அலைக்கழிக்க மாட்டேன் என்ற பொருத்தனையோடு சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

4) தத்தளிப்பு
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)
இவர் தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதறவேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது. வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது பாவம் நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது. தேவன் நம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது.

யோவான் 8:29 ல் பார்ப்போமானால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னை தனியேயிருக்கவிடவில்லை என்றார். அதே போன்று மறுரூபமலையிலே எலியாவோடும் மோசேயோடும் பேசிக்கொண்டிருக்கையில் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் எனக் கூறினார். இங்கே பார்க்கும் போது பிதா எப்பொழுதும் அவரோடு உறவாடியதற்கு காரணம் அவரிடம் பாவமில்லை என்பதினால் தான். அன்று கல்வாரியிலே பிதா அவரை ஒரு நிமிடம் கைவிட வேண்டும் என்றால் அதற்கு அவருக்கும் பிதாவிற்கும் இடையில் ஒன்று வரவேண்டும் அது பாவம் ஆனால் அவர் பாவம் செய்யவில்லையே! எப்படியெனில் உலகமும் அதில் உள்ளவர்களும் செய்த பாவமே அதற்கு காரணம். 2கொரி 5:21 இப்படி சொல்லுகின்றது நாம் அவருக்குள் நீதியாகும் படிக்கு அவரை நமக்காகப் பாவமாக்கினார். எனவே இயேசு முதன் முறையாக பிதாவின் தொடர்பு இல்லாமல் இருந்தார்.
நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக்கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார் அது நியாயத்தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது. அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை இயேசுவே நமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத்தந்துள்ளார்.
எபிரெயர் – 2:4 ல் பவுல் கூறுகிறார்
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

5) தவிப்பு
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28)

தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையை யோவான் எழுதும் முன்பாக இயேசு ஏதோ ஒன்றை அறிந்து அதன் பின் இந்த வார்த்தையை சொன்னதாக எழுதுகிறார். இயேசு என்னதை அறிந்து கொண்டார் என்று பார்க்கும் பொழுது அவர் எல்லாம் முடிந்தது என்று அறிந்து என்று இந்த வசனம் சொல்கிறது.ஆனால் இயேசுகிறிஸ்து சொன்ன ஏழு வார்த்தைகளில் முடிந்தது என்பதும் ஒரு வார்த்தை உள்ளது.ஆனால் இயேசு இந்த இடத்தில் எல்லாம் முடிந்தது என்று அறிந்து தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

இயேசுகிறிஸ்து மட்டும் தான் என்ன நோக்கத்துக்காக உலகத்தில் அவதரித்தாரோ அதில் ஒரு அச்சும் கூட பிசகாமல் அதை சாதித்து முடித்தார்.
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்.
அப்படியானால் அந்த வேத வாக்கியம் என்ன?

சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

இயேசுகிறிஸ்து வேத வாக்கியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உண்ணும் போஜனமும்,அவருடைய தாகத்துக்கு தகுந்த தண்ணீரும் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால்,வேத வசனம் இப்படியாக சொல்லுகிறது

யோவான் 4:34 இயேசு அவர்களை நோக்கி, நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடையகிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக உள்ளது, இயேசுவின் தாகம் பிதாவின் சித்தம் செய்யப்படுவதே.அப்படியானால் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை அச்சடையாளமாக கொண்ட திருச்சபையே இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்ன செய்துவருகிறோம்.பிதாவின் சித்தத்தை நாம் உணர்ன்து இருக்கிறோமா?

கீழே உள்ள வசனங்கள் பிதாவின் சித்தம் என்ன என்று நமக்கு அழகாக காண்பிக்கின்றது.

மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளைஎழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

இதுவே பிதாவின் சித்தம்.இதை நிறைவேற்றுகிறவனே இயேசுவின் தாகத்தை தீர்க்கமுடியும்.உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் என்பதே பிதாவின் சித்தம்.அப்படியானால் அந்த ஆத்துமாக்களை நேசிக்கிறவன் இயேசுவுக்கு சாப்படு கொடுக்கிறவனாக,தண்ணீர் கொடுக்கிறவனாக காணப்படுவான் என்று இயேசு சொல்லுகிறார்.

மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
அப்பா உம்முடைய சித்தத்திற்கு என்னை ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

6) அர்ப்பணிப்பு
இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் நித்திய நரகத்திற்கு நேராக போய் கொன்டு இருந்த நம்மை மீட்கும் படி தன்னையே பலியாக கொடுக்கும்ப்படியே.... அதை முறியடிக்க பிசாசு, வலுசர்ப்பம், அலகை, இப்படி பல பெயருடைய தந்திரமுள்ள இந்த உலகத்தின் அதிபதி முயற்சி செய்தான். ஆனாலும் ஆண்டவர் எல்லாவற்றையும் முறியடித்து இறுதியில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். ஆக ஆண்டவரின் முடிந்தது என்ற இந்த வார்த்தை ஒரு சோகவார்த்தையல்ல. அது ஒரு வெற்றியின் வார்த்தை.

ஆம் சிலுவையில் வெற்றி சிறந்த நேசரின் வெற்றிக்குரல்.
நம்முடைய பாவங்களுக்கு மீட்பு இல்லை என்பது இத்தோடு முடிந்தது. நம்க்கு நித்திய ஜிவன் இல்லை என்ற வார்த்தை இத்தோடு முடிந்தது. எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது.அவருடைய மரணத்தை குறித்தான தீர்க்கதரிசனங்கள் முடிந்தது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிளவு இனி முடிந்தது. யூதர் பிற இனத்தார் என்ற பிரிவு இனி முடிந்தது.மனிதனின் பாவங்களுக்கும் நோய்களுக்கும் பரிகாரம் உண்டாக்கி முடிந்தது. நம்முடைய ஜெபங்களுக்கு தடையாக காணப்பட்ட எல்லா காரியங்களும் இனி முடிந்தது. சத்தானின் அதிகாரம் இனி முடிந்தது. எல்லாம் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே தான் ஒரு வெற்றியின் குரல் என்கிறேன். அது ஒரு கிழ்படிதலின் குரலும் ஆகும். நம் வாழ்கையிலும் இந்த வெற்றியின் குரல் தொனிக்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?

7) ஒப்புவிப்பு
இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

ஆறு வார்த்தைகளையும் மகாவேதனையின் மத்தியில் கூறிய இயேசு, ஏழாவது வார்த்தையாக தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவராய் பூரண திருப்தியுடன் பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்புவிக்கின்ற வார்த்தையை கூறுகின்றார். ஏழு என்னும் இலக்கம் பரிபூரணத்தை குறிக்கிறது, ஆகவே அவர் கூறிய ஏழாவது வார்த்தை மிகவும் பரிபூரணமான வார்த்தையாக காணப்படுகிறது.
இங்கு ஒன்றை கவனிப்போமானால் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார் என வேதம் கூறுகிறது. ஏன் இயேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்? பிதா எப்பொழுதும் அவருரோடே கூட இருந்தவர் மெதுவாய் அல்லது மனதிற்குள் சொன்னால் பிதாவிற்கு தெரியாதா? அல்லது விளங்காதா? ஏனெனில் தான் ஜீவனை விடுகின்ற அந்த தொணி ஏரோதிற்கு கேட்க வேண்டும், தன்னை ஏற்காதா இஸ்ரவேலருக்கு கேட்க வேண்டும், ஏன் இன்னும் இரண்டாயிரத்தி ஏழு வருடங்கள் கழிந்தும் தன்னை ஏற்காத, தன்னை மறுதலிக்கின்ற ஜனங்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே. யோவான் 10:17 18 ஆம் வசனம் இப்படி கூறுகின்றது நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதை கொடுக்கிற படியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதை கொடுக்கிறேன் அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. ஆகவே இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனும் தன் ஆவி பிரிவதை அறியான். ஒரு வேளை நான் மரிக்கப் போகின்றேன் என்பதனை ஒருவன் உணரலாம் ஆனால் அது எப்பொழுது என்பது எந்தக் கணப்பொழுதில் என்பது அவனுக்கு தெரியாது ஏனெனில் தேவன் தான் ஜீவனைத்தருகின்றார் அவரே அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றர்ர். ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்ற படியினால் தன் ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுத்தார் என்பதனை இங்கு காண்கிறோம். இயேசுவிற்கு எத்தனையோ விதமான தண்டணைகளை, ஆக்கினைகளை அன்று கொடுத்தார்கள். ஆனால் யாராலும் அவரின் உயிரை எடுக்க முடியவில்லை. ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு, என அவர் சொன்ன வார்த்தையின் பிரகாரம் பிதாவின் கரத்திலே தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார். மறுபடியும் பிதாவின் கரத்திலிருந்து மூன்றாம் நாளில் தனது ஆவியை பெற்றுக்கொண்டார். மத்தேயு 3:16 ஆம் வசனத்திலே இயேசு ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு வானம் திறக்கப்பட்டது என வேதத்தில் காண்கிறோம். இங்கு நமது ஆதி பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையினால் அடைக்கப்பட்ட வானம் பிந்திய ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்படிவினால் அதாவது ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு திறக்கப்பட்டது. மீண்டும் சிலுவையிலே ஜெபத்துடன் தன்னுடைய ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது புத்திரசுவிகாரர்களாய் நாங்கள் யாவரும் பரத்துக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டது. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகள் திறந்தது நித்திரையடைந்த அனேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. இதிலே முக்கியமாய் கூறப்போனால் நூற்றுக்கு அதிபதியும் அவனோடே கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும் நடந்த சம்பவங்களை கண்டு இவர் மெய்யாய் தேவனுடைய குமாரன் என அறிக்கை செய்தார்கள்.

II கொரிந்தியர் 6:2 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம் அவர் சிலுவையில் எவ்வளவாக அவர் பிதாவின் சித்தம் செய்ய தன்னை அர்பணித்திருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது. இன்றைக்கு நாம் இயேசுவுக்காக துக்கம் கொண்டாடாமல் இயேசு லுூக்கா 23:28 ல் சொன்னது போல்

இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி, எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லுூக்கா 23:28

இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார். கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

Monday, March 29, 2010

மேய்ப்பன்

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
சங்கீதம்-78:71
ஆடுகளின் பின்னாகத் திரிந்த தாவீதை தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலை மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார் என பார்கிறோம்
இந்த மேய்ப்பன் சங்கீதம் 23 ம் அதிகாரத்தில் கூறுகிறான்
1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
ஆம் கர்த்தர் அவனுடைய மேய்ப்பனாக இருந்தபடியால் அவன் தாழ்ச்சியடையவில்லை என பார்க்கிறோம். ஆம் இந்த நாட்களிலே கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் நாமும் இதே போல சொல்ல முடியும். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்என்று.
கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் அவர் நம்மை எப்படி மேய்ப்பர் என்பதை இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறுகிறான்
பாருங்கள் அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம் ஆத்துமாவைத் தேற்றி நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
அவர் நம்மோடு கூட இருக்கிறார். நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறார், நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மை பாதுகாக்கிறார். கர்த்தர் நம் மேய்ப்பனாக இருந்தால் இவிதமாக பல ஆசிர்வதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதே சமயத்தில் மேய்ப்பன் என்று சொல்லுகின்ற சில ஓநாய்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாய் இருக்க திருமறையில் கூறப்பட்டுள்ள சில மேய்ப்பர்களை நாம் இங்கே பார்க்கலாம்
முதலாவது ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
பகுத்தறிவில்லாத மேய்ப்பர்
இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவை நோக்கிக்கொண்டிருக்கிற திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்என்று
ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

ஆம் இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மிருககுணமுள்ள மேய்ப்பர்
இங்கே நாம் பார்க்கும்போது கர்த்தரைத் தேடாத மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரிசி கூறுகிறான் மிருககுணமுள்ள மேய்ப்பர்கள்என்று.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
கர்த்தரை தேடாத மேய்ப்பனிடத்தில் போனால் நாமும் சிதறடிக்கப்படுவோம் என்பதை மறந்து போகாதே.
லூக்கா- 11 ம் அதிகாரம் 23 ம் வசனத்தை படிக்கும்போது அருள்நாதர் இவ்விதமாக கூறுகிறார்
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
எனவே இப்படிப்பட்ட மிருககுணமுள்ள மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது
தங்களையே மேய்க்கிற மேய்ப்பர்
இந்த மேய்ப்பர் எப்படி இருக்கிறார்கள் என பார்த்தால் இவர்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறார்கள்; கொழுத்ததை அடிக்கிறார்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறார்கள்.
பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆளுகிறார்கள்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 3, 4 ம் வசனங்களில் இதை தெளிவாக பார்க்கலாம்
5 ம் வசனத்தை பார்க்கும்போது
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
இப்படிப்பட்ட மேய்ப்பர்களுடைய மந்தைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின என பார்க்கிறோம்.
நாமும் காட்டு மிருகத்திற்க்கு இரை ஆகாதபடி இப்படிபட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
இப்படிபட்ட மேய்ப்பரை பார்த்து கர்தர் கூறுகிறார் எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனம்
தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ!
சகரியா - 11 ம் அதிகாரம் 17 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மந்தையைக் கைவிடுகிற மேய்ப்பன்
இப்படிப்பட்ட மேய்ப்பர்களை கர்தர் வெறுக்கிறார் இவர்களை பற்றி தேவன் சகரியா தீர்கதரிசி முலமாக கூறுகிறார்
சகரியா - 11 : 17 ல்
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
இப்படி பட்ட மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரசி மூலமாக தேவன் எச்சரிக்கிறார் எரேமியா - 23 ம் அதிகாரம் 1,2ம் வசனத்தை படிக்கும்போது
1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் அன்பானவர்களே இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
அப்படியானால் நம்முடைய மேய்ப்பன் யார்?
நம்முடைய மேய்ப்பன் பகுத்தறிவுள்ள, மிருககுணமற்ற, மந்தையை கைவிடாத, தன்னையே மேய்க்காத, நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கிற மேய்பனாக இருக்க வேண்டும்
யோவான் 10:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
ஆம் அன்பானவர்களே கடைசி காலத்தில் வந்து இருகின்ற நாம் யாருக்கு பின்நாலேயும் ஓடாமல் ஆடுகளுடைய பெரிய மேய்ப்பராம், பிரதான மேய்ப்பர் இயேசுவிற்கு நம்மை ஒப்புகொடுப்போமா
நமக்காக தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய நல்ல மேய்ப்பனாம் நம் இயேசு கடைசி வரைக்கும் நம்முடைய ஜீவனை அழிவிலின்றும் அந்தகாரத்திலின்றும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
எந்த பாவியேயும் தள்ளாத நேசர் இதோ நம்மையும் அழைக்கிறார்
நம்முடைய முழங்கால்களை அவருக்கு முன்பாக முடக்குவோமா, அப்பா என்னையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்போமா
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Thursday, March 25, 2010

தேவ சித்தம்

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5: 16-18.
ஆம் அன்பானவர்களே நம்மை குறித்து நம் தேவனுடைய சித்தம் எப்பொழுதும் ஸ்தோத்திரஞ்செய்ய வேண்டும் என்பதே
இந்த வருட, முதல் மாதத்தின் கடைசி நாட்களில் நாம் வந்து இருக்கிறோம். இந்த மாதம் முழுவதும் தேவன் நம்மை நடத்தி வந்த பாதைகள் எத்தனை அருமையானவைகள்! நம்மை ஜீவனோடு காத்து, சுகபெலத்தை கொடுத்து ஒவ்வொரு நாளும் தமது கிருபையால் நம்மை வழிநடத்தினாரே! நமது போக்கையும் வரத்தையும் அருமையாய் காத்து வேலையிடத்தில் ஞானத்தை கொடுத்து வழிநடத்தினாரே
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். என்ற வசனத்தின்படி நம்மை உறங்காது இந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்தாரே!
இப்படி தேவன் அதிசயமாய் நடத்தி வந்த வழிகளை நினைத்து, நாம் அவரை ஸ்தோத்திரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கர்த்தர் நமக்கு செய்த எல்லா உபகாரங்களுக்கும் ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? சங்கீதம் 116:13-14 ல் சங்கீதக்காரன் கூறியது போல 'கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்' என்று நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அப்பா நீர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் என்று நம்முடைய ஸ்தோத்திர பலியை செலுத்துவோமா
எபிரெயர் 13:14,15 ல் அப்போஸ்தலனாகிய பவுல் பவுல் கூறியது போல
14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் .
15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
ஆம் அன்பானவர்களே இப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அவருடைய நாமத்தைத் துதிக்கும், உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை செலுத்தும் சீயோன் குமாரத்தியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் சகரியா – 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

Wednesday, March 10, 2010

அனைத்தும் நன்மைக்கே

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில், வேலையிடத்தில், குடும்பத்தில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, எனிக்கு ஏன் இந்த துன்பம் என கேட்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உண்மை கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
இதை யோசேப்பின் வாழ்க்கையில் பார்க்க முடியும் ஆதியாகமம் 45:5 ஐ படிக்கும்போது
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்'
என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவனை தேவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாற்றினார், ஆம் தீமைஅனைத்தையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன்.
இன்னும் யோனாவின் வாழ்க்கையை பார்க்கும்போது யோனா 1:15 ஐ படிக்கும்போது
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்;
என பார்கிறோம் ஒருவேளை யோனா நினைத்திருக்கலாம் நான் இதோடு மரித்தது போவேன் என்று. பாருங்கள் தேவன் யோனாவை விடுவித்தது மட்டும் அல்ல யோனா முலமாக நினிவேக்கு ஒரு பெரிய இரட்ச்சிப்பை கட்டளையிட்டார்

அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நமக்கு
கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
எரேமியா - 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

ஆமென்

Sunday, March 7, 2010

விட்டு ஓடு

நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு 6:11
இந்த நாட்களில் இரண்டு முக்கியமான காரியத்தை விட்டு ஓடும் படி தேவன் நம்மை எச்சரிக்கிறார்
முதலாவதாக வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியரூக்கு எழுதிய நிருபத்தில் இவ்விதமாக கூறுகிறார் 1 கொரிந்தியர் 6:18 ஐ படிக்கும் போது
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
யோசேப்பை பாருங்கள்,
ஆதியாகமம் 39 தாம் அதிகாரம் 12 ம் வசனத்தை படிக்கும் போது
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்
ஆம் அன்பானவர்களே யோசேப்பு, பாவம் செய்ய தூண்டும் இடத்தை விட்டு ஓடிப் போனான் என்று வாசிக்கிறோம். ஆம் அப்படி அவன் ஓடி போனதால் அந்த நாட்டிற்கே அதிபதியாய் ஆனான் என பார்க்கிறோம். கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்க வேண்டுமானால் நாமும் இப்படி பட்ட காரியத்திற்கு விலகி ஓடும் படி தேவன் நம்மை எச்சரிக்கிறார்
இரண்டாவதாக விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்
1 கொரிந்தியர் 10:14 ஐ படிக்கும் போது

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
ஆம் இன்று உலகம் விக்ரகத்துக்கு பின்னாக ஓடிக்கொண்டு இருக்கிறது தேவன் எச்சரிக்கிறார் விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் என்று.
அப்போஸ்தலனாகிய யோவான் 1 யோவான் – 5:21 ல் நம்மை பார்த்து கூறுகிறார்
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.
வெளிப்படுத்தின விசேஷம் 21 ம் அதிகாரம் 8 ம் வசனத்தில்
……..விக்கிரகாராதனைக்காரரும்…………. அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்
என பார்க்கிறோம்
அக்கினிக்கு இரை ஆகாதபடி விக்கிரகங்களுக்கு விலகி ஓட தேவன் நம்மை எச்சரிக்கிறார்
ஆம் அன்பானவர்களே பவுல் தீமோத்தேயுக்கு கூறியது போல இன்று தேவன் நம்மை பார்த்து கூறுகிறார். நம்மை வழிவிலக செய்யும் பாவமான காரியங்களை விட்டுவிட்டு, நீதியையும் தேவபக்தியையும், மற்ற காரியங்களையும் அடையும்படி தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம். கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

Saturday, February 27, 2010

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் - 8:1
ஆம் அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் மாதிரம்மல்ல யாத்திராகமம் 15:26 ல் கூறப்பட்டது போல எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வர அனுமதிக்க மாட்டார்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15:26
அவர் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும் சகோதரனே சாகோதரியே கர்த்தர் கூறுகிறார் நானே உன் பரிகாரியாகிய கர்த்தர், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். பாருங்கள் என்ன அருமையான வாக்குத்தத்தம்.
பொதுவாக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். இந்த மருத்துவரிடம் போய் நாம் மருந்து வாக்கினால் ஒவ்வொரு மருந்துக்கும் கேடுள்ள பின் விளைவுகள் உண்டு, ஆனால் எல்லா வியாதிக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி, நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்ன நம் இயேசுவே. இந்த இயேசுவிடம் நாம் போனால், அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால் நமக்கு கேடுள்ள எந்த பின் விளைவும் இல்லை மாறாக பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மையாக வைப்பார். நித்திய ஜீவனையும் அளிப்பார்.
நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது எதை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்து, அவர் கட்டளைகளை கைகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். நம்மை மேன்மையாக வைப்பார் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Wednesday, February 24, 2010

அவர் பாதத்தில் விழுவோமா

அவர் பாதத்தில் விழுவோமா
அப்போஸ்தலருடைய நடபடிகள் - 14:15 ம் வசனத்தை பார்க்கும்போது
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
இன்றைக்கு நாமும் இப்படித்தான் கானபடுகின்றோம் படைத்தவரை மறந்து படைப்பை நோக்கி மான்றாடிக்கொன்டிருக்கிறோம். மாத்திரமல்ல உருவாகினவரை விட்டுவிட்டு உபயோக படுத்திய கருவியை நோக்கி ஓடிகொண்டிருக்கிறோம்.
யாக்கோபு – 5:17 ல்
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம்- 72:12 ல்
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
இதை மறந்து விடுகின்றோம். பதிலாக யார் மூலமாக விடுதலை கிடைத்ததோ அவருக்கு பின்னால ஓடிக்கொன்டிருக்கிறோம்
அவர் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார் என்பதை மறந்து போகாதே
சங்கீதம்- 50:15 ல்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்
ஆம் சகோதரனே சாகோதரியே கர்த்தரை நோக்கி கூப்பிடு அவர் உன்னை விடுவிப்பார். நீ யாருக்கு பின்னாலும் ஓட வேன்டிய அவசியம் இல்லை காரணம் அவர்களும் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷர்கள் தான்.
அன்னாள் தேவ சமுகத்தில் தன் கண்ணீரை ஊற்றினாள், கர்த்தர் அவள் நிந்தையை மாற்றினார் என பார்க்கிறோம்.
நாமும் நம்முடைய தேவைக்காக நம்முடைய முழங்கால்களை மடக்கினால் நம்முடைய தேவைகளை அவர் நிவிர்த்தி செய்வார். நமக்காக நம்முடைய தேவைக்காக கண்ணீரோடு ஜெபிக்க ஒரு கூட்ட ஜனத்தை அவர் ஆயதபடுதுவார்
ரோமர் – 11:4 ல் பவுல் கூறுகிறார்
அவனுக்கு (எலியாவுக்கு) உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
எனக்கு யாரும் இல்லையே என கதறிய எலியாவிற்க்கு தேவன் கொடுத்த உத்தரவு போல இன்றும் தேவன் நமக்கு உத்தரவு கொடுக்கிறார்
சங்கீதம்- 107:6 ல்
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
அவர் என்னை விடுவித்தார் என்ற விசுவாசத்தோடு அவர் பாதத்தில் விழுவோமா
கர்த்தர் நம் அனைவரயும் ஆசிர்வதிபாரக ஆமன்

Tuesday, February 23, 2010

யாருக்கு வெட்கம்

சங்கீதம்-22:5 ல் சங்கீதக்காரன் கூறுகிறான்
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.
ஆம் கர்த்தரை நம்பினவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். இன்னும் சங்கீதம்-34:5 ல் பார்கிறோம்
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
ஆம் அன்பானவர்களே கர்த்தரை நம்பினவர்களும், அவரை நோக்கிப்பார்த்தவர்களும் வெட்கப்படவில்லை
அப்படியானால் யாருக்கு வெட்கம்
முதலாவதாக கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களுக்கு வெட்கம்
தானியேல் -9:8 ல்
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
ஆம் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் அவர்களும் அவர்கள் ராஜாக்களும் அவர்கள் பிரபுக்களும் வெட்கத்துக்குரியவர்களானார்கள் என பார்கிறோம்
இரண்டாவதாக கர்த்தரை விசுவாசியாதவர்களுக்கு வெட்கம்
1 பேதுரு -2:6 ல்
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ஆம் கர்த்தர் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என பார்கிறோம்
மூன்றாவதாக கர்த்தரை பகைக்கிற அனைவருக்கும் வெட்கம்
சங்கீதம்-129:5 ல்
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
ஆம் கர்த்தரை பகைக்கிற அனைவருமே வெட்கப்படுவது மட்டுமல்ல பின்னிட்டுத் திரும்புவார்கள் என பார்க்கிறோம்.
1 யோவான் -2:28 ல்
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களா யிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
ஆம் அவர் வரும் போது அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் இருக்க அவரில் நிலைத்திருக்கவேண்டும்
கர்த்தருக்கு வேரோதமாக பாவம் செய்யாமல் அவரில் நிலைத்திருந்து அவரை பகைக்காமல் அவரை விசுவாசிக்கிற சகோதரனே சாகோதரியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
யோவேல் – 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்;என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்